1899ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் நாள் - இரண்டாம் போயர் போர் தொடங்கியது

Home

shadow


 இரண்டாம் போயர் போர் தொடங்கியது. போயர் என்றால் விவசாயிகள் என பொருள். ஆப்ரிக்காவின் தெற்கு பகுதியில் குடியேறிய டச் மக்கள் போயர் என அழைக்கப்பட்டனர். 17ஆம் நூற்றாண்டின் மத்தியில் தென் ஆப்ரிக்காவில் ஐரோப்பியர்கள் குடியேற தொடங்கினர். 


அந்தப் பகுதி டச் கிழக்கு இந்திய கம்பெனியின் ஆதிக்கத்தில் இருந்து வந்தது. 1700களுக்கு பின் நேரடியாக நெதர்லாந்து நாட்டின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. ஆங்கிலேயர்களின் ஆதிக்கமும் படிப்படியாக அதிகரித்து வந்த நேரத்தில், 1806 ஆம் ஆண்டு டச் மக்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் மூண்ட போரில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றனர். Cape Colony பகுதியில் இருந்து கிழக்கு கரையோரம் வேறு பகுதிகளுக்கு செல்ல தொடங்கிய போயர்கள், ட்ரான்ஸ்வால் குடியரசு மற்றும் ஆரஞ்சு ப்ரீ ஸ்டேட் என இரண்டு குடியரசுகளை அமைத்தனர். 1877 ஆம் ஆண்டு ட்ரான்ஸ்வால் குடியரசு பகுதியை ஆக்ரமிக்கும் பிரிட்டிஷின் எண்ணம் காரணமாக 1880 ஆம் ஆண்டு முதல் போயர் போர் மூண்டது. இதில் போயர்களே வெற்றிபெற்றனர். 1886ஆம் ஆண்டு ட்ரான்ஸ்வால் அதாவது தென் ஆப்ரிக்கா பகுதியில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. தங்கத்துக்காக அந்தப் பகுதியை ஆக்ரமிக்க ஆங்கிலேயர்கள் முடிவு செய்தனர். இதன் காரணமாக 1899ஆம் ஆண்டு இரண்டாம் போயர் போர் தொடங்கியது. போரின் தொடக்கத்தில் போயர்கள் வெற்றி பெற்றாலும், 18 மாதங்கள் தொடர்ந்த போரில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றனர். , ட்ரான்ஸ்வால் குடியரசு மற்றும் ஆரஞ்சு ப்ரீ ஸ்டேட் ஆகிய பகுதிகள் இணைக்கப்பட்டு தென் ஆப்ரிக்க தேசம் உருவாக்கப்பட்டது. 


இது தொடர்பான செய்திகள் :