1905ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி

Home

shadow

            20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ரஷ்யாவின் ஜார் மன்னர் நிகோலஸ் 2 க்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் வெடித்தன தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள், விவசாயிகளின் போராட்டங்கள், இராணுவ கலகங்கள் என பல்வேறு தரப்பினரும் கிளர்ந்தெழுந்தனர். 1905 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிப்பதற்காக ஜார் மன்னரின் குளிர்கால அரண்மனையை நோக்கி அமைதியான முறையில் அணிவகுப்பாகச் சென்றனர்.                                                                    மாளிகையின் காவலில் ஈடுபட்டிருந்த வீரர்களுக்கு போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து நடந்த தாக்குதலில் நூற்றக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வு Bloody Sunday என அழைக்கப்பட்டது. தொழிலாளர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து நாடெங்கும் புரட்சி ஆரம்பம் ஆனது. இரண்டு வருடங்களுக்கு மேல் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. ரஷ்ய புரட்சியின் தொடர்ச்சியாக ரஷ்ய அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. ரஷ்யாவின் கீழ் சபையான ஸ்டேட் டுமா (State Duma) நிறுவப்பட்டது. பேச்சுரிமை, மத சகிப்புத்தன்மை, மக்களதிகார சபைகள் உருவாக்கம் எனப் பின்னாளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படக் காரணமாக அமைந்த ப்ளடி சண்டே (Bloody Sunday) நிகழ்வு.

இது தொடர்பான செய்திகள் :