1911ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் நாள் - சீனப் புரட்சி வெடித்தது

Home

shadow


சீனாவில் ஏகாதிபத்திய ஆதிக்கத்தை வீழ்ச்சி அடைய செய்த Xinhai  புரட்சி என்று அழைக்கப்பட்ட சீனப் புரட்சி தொடங்கியது. 


மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கம் ஆசிய கண்டத்தில் அதிகரித்திருந்தது. வர்த்தக ரீதியாக சீனாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே இருந்த பூசல் காரணமாக 1842ஆம் ஆண்டு, “முதல் ஒபியம் போர்” மூண்டது. அதில் சீனா தோல்வி அடைந்தது. 1860ஆம் ஆண்டு நடந்த இரண்டாம் ஒபியம் போரிலும் சீனா தோற்றது. மாறி வரும் காலத்துக்கு ஏற்ப மன்னராட்சியில் மாற்றங்கள் கொண்டு வர முயற்சி செய்யாதது தான் சீனாவின் தோல்விக்கு காரணம் என மக்கள் கருதினர். 1895ஆம் ஆண்டு நடந்த முதல் சீனா-ஜப்பான் போரிலும் சீனா தோற்றது. நவீனத்தை அனுமதிக்காதது தான் தொடர் தோல்விக்கு காரணமாக கூறப்பட்டது. இது சீன மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. Sun Yat-sen-இன் அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகள் சீனாவின் ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக மக்களை,  குறிப்பாக இளைஞர்களை திரட்டி வந்தன. வெளிநாடுகளில் இருந்த சீனர்கள் இந்த போராட்டங்களுக்கு பெரிதும் உதவி புரிந்தனர். ஆளும் QING ஆட்சியாளர்களுக்கு எதிராக 1911 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பத்தாம் நாள் ஆரம்பித்த ஊச்சங் எழுச்சி திருப்புமுனையாக அமைந்தது. பல்வேறு போராட்டங்கள் நடந்தன. எழுச்சியின் காரணமாக இரண்டாயிரம் ஆண்டுகள் சீனாவை ஆட்சி செய்து வந்த ஏகாதிபத்திய மன்னராட்சி 1912ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவுக்கு வந்தது. Republic of China உருவானது. 

இது தொடர்பான செய்திகள் :