1912 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் நாள்

Home

shadow


மின் சக்தியில் இயங்கும் முதல் சைகை விளக்கு நிறுவப்பட்டது.

மோட்டார் வாகனங்களின் அபரிவிதமான வளர்ச்சியால் சாலையில் போக்குவரத்து நெரிசலும் அதிகமாகிவிட்டது. சாலை போக்குவரத்தை முறைப்படுத்த போக்குவரத்து காவலர்களுக்கு மிகவும் உதவியாக இருப்பவை சைகை விளக்குகள். சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறம் என மூன்று நிறங்களை கொண்டவை சைகை விளக்குகள், இதில் சிவப்பு வாகனங்களை நிறுத்தவும், மஞ்சள் புறப்பட ஆயத்தமாகவும், பச்சை வாகனங்கள் செல்ல வேண்டும் என்பதையும் குறிக்கின்றன. 1868-ஆம் ஆண்டு லண்டனில் உள்ள பிரிட்ஜ் ஸ்ட்ரீட் பகுதியில் முதன் முதலாக போக்குவரத்து சைகை விளக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் எரிவாயு உதவியுடன் இந்த சைகை விளக்கு இயக்கப்பட்டது. ஆனால் 1869-ஆம் ஆண்டே இதன் பயன்பாடு நிறுத்தப்பட்டது. எரிவாயு கலன் வெடித்ததை தொடர்ந்து இந்த சைகை விளக்குகளின் பயன்பாடு நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து 1912-ஆம் ஆண்டு முதன் முதலில் மின் சக்தியில் இயங்கும் முதல் சைகை விளக்கு பயன்பாடிற்கு வந்தது. அமெரிக்காவை சேர்ந்த லெஸ்டர் வயர் எனும் காவல் துறை அதிகாரி இந்த சைகை விளக்கை உருவாக்கினார். 1912-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள ஒஹியோ மாகாணத்தின் கிளிவ்லேண்ட்டில் உள்ள இயுக்லிட் அவன்யு மற்றும் கிழக்கு 105-வது தெரு பகுதியில் இந்த விளக்குகள் நிறுவப்பட்டன. அன்று முதல் இன்று வரை போக்குவரத்து துறையில் சைகை விளக்குகளின் பங்களிப்பு தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது

இது தொடர்பான செய்திகள் :