1912 ஆம் ஆண்டு ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி

Home

shadow

கருப்பின மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை பெற்றுத் தருவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு இது ஆரம்பிக்கப்பட்டது. தென் ஆப்ரிக்க அரசு நிலச் சட்டம் 1913 மூலம் கருப்பின மக்களை அவர்கள் வயல்களில் இருந்து வெளியேற்றி நகரங்களில் வேலையாட்களாக பணிபுரிய வைத்தது. கருப்பினத்தவர்களுக்கு தனியாக அடையாள அட்டை கொடுக்கப்பட்டதை எதிர்த்தும் போராட்டங்கள் நடைபெற்றன. 1923 ஆம் ஆண்டு ஆப்ரிக்கன் நேஷனல் காங்கிரஸ் என பெயர் மாற்றத்துடன் 1940-களில் மிகப் பெரிய மக்கள் இயக்கமாக உருவெடுத்தது.  கருப்பின மக்களுக்கு எதிராக நடைபெற்ற அநீதிகளை எதிர்த்து வேலைநிறுத்தங்கள், புறக்கணிப்புகள், மற்றும் ஒத்துழையாமை போராட்டங்கள் நடத்தப்பட்டன.. இதனால் தென் ஆப்ரிக்கா அரசு 1960-ஆம் ஆண்டு ஏ.என்.சி யை தடை செய்தது. அந்தத் தடை உத்தரவு முப்பது வருடங்களுக்கு பின் 1990-ஆம் ஆண்டு தான் விலக்கப்பட்டது. ஏ.என்.சி உறுப்பினரான நெல்சன் மண்டேலாவை 27 ஆண்டு கால சிறைக்கு பின் தென் ஆப்ரிக்கா அரசு விடுதலை செய்தது. நெல்சன் மண்டேலா 1994 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் அதிபரானார். அன்றிலிருந்து தென் ஆப்ரிக்காவை ஆளும் கட்சியாக உருவெடுத்தது ஆப்ரிக்கன் நேஷனல் காங்கிரஸ்.

இது தொடர்பான செய்திகள் :