1912 ஆம் ஆண்டு பிப்ரவரி  12 ஆம் தேதி

Home

shadow

1912 ஆம் ஆண்டு பிப்ரவரி  12 ஆம் தேதி

 

சீனாவின் கடைசி மன்னரான ஷியான்துங் அரசர் பதவியைத்துறந்தார்.  மன்னராட்சி நடைபெற்று வந்தசீனாவில் 19வது நூற்றாண்டின் இறுதியில் குடியரசு மலர வேண்டும் என புரட்சியாளர்கள் எண்ணினர். மருத்துவர், எழுத்தாளர், தத்துவவாதி எனப்பன் முகத்தன்மை கொண்ட சன் யாட் சென் புட்சியாளர்களுடன் இணைந்து செயல்பட ஆரம்பித்தார். பல்வேறு போராட்டங்களுக்கு பின் 1912 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியை புதிய சீன குடியரசு நாட்டின் முதல் நாளாக அறிவித்தனர். அதன் அதிபராக சன் யாட் சென் தேர்வு செய்யப்பட்டார்.பிப்ரவரி 12ஆம் தேதி சீனாவின் கடைசி மன்னரான Hsian-T’ung தனது பதவியை துறந்தார். சீனாவில் இரண்டாயிரம் ஆண்டுகள் நடைபெற்ற மன்னர் ஆட்சியும் 267 ஆண்டு காலம் நடைபெற்ற  Manchu ஆட்சியும் முடிவுக்கு வந்தது. ஆறு வயதான மன்னர் Hsian-T’ung பெய்ஜிங்கில் இருந்த அரண்மனையில் வசிக்க அனுமதி வழங்கப்பட்டது. 1925ஆம் ஆண்டுக்கு பின் Hsian-T’ung நாடுகடத்தப்பட்டார்.ஜப்பான் ஆதரவை பெற்ற அவர் மன்சூரியாவில் புதிய ஆட்சியை அமைத்தார். 1945ஆம் ஆண்டு வரை மன்னர் என்ற பட்டத்தை கொண்டிருந்த இவரை சோவியத் படை கைது செய்தது.சீனாவில் கம்யூனிஸ ஆட்சி மலர்ந்த காலம் அது. Hsian-T’ungஐ சீனா கம்யூனிஸ ஆட்சியாளர்களிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட Hsian-T’ungஐ 1959ஆம் ஆண்டு மா சே துங், விடுதலை செய்தார். விடுதலையானபின்,  முன்னாள் மன்னர் Hsian-T’ung, ஒரு மெக்கானிக் கடையில் பணியாற்றி வாழ்க்கை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இது தொடர்பான செய்திகள் :