1913 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் நாள் - கம்போ டைக் தகர்க்கப்பட்டது

Home

shadow


Gamboa Dike தகர்க்கப்பட்டது. பசுபிக் பெருங்கடலையும் அட்லான்டிக் பெருங்கடலையும் அமெரிக்கக் கண்டங்களிடையே செயற்கைக் கால்வாயான பனாமா கால்வாய்  இணைக்கிறது.  உலகின் மிக கடினமான பொறியியல் திட்டங்களில் இதுவும் ஒன்று. இந்த பனாமா கால்வாயின் வழியானது அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களுக்கு இடையே பயணம் செய்யும் கப்பல்களுக்கான நேரத்தைக் குறைக்கிறது. 82 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த கால்வாய் சர்வதேச கடல் வழி வர்த்தகத்துக்கு முக்கிய வழியாக உள்ளது. பதினாறாம் நூற்றாண்டிலேயே பனாமா கால்வாய் திட்டம் உருவாக்கப்பட்டது. 1881 இல் பிரான்ஸ் நாட்டு தலைமையில் கால்வாய் வெட்டும் பணி தொடங்கியது. பணியில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இறக்க நேரிட்டது. இம்முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. 1904 இல் அமெரிக்கா மீண்டும் இப்பணியைத் தொடங்கியது. சவால் நிறைந்த இந்த பணியில் இடையூறுகள் பல வந்தன. இறுதி கட்டத்தில் Gamboa Dike என அழைக்கப்பட்ட சிறிய மலை பகுதி சவால் மிக்கதாக இருந்தது. ஆனால் பனாமா கால்வாய்  திட்டத்தை மிக தீவிரமாக செயல்படுத்திய அமெரிக்க அரசு, அந்த சிறிய குன்றை தகர்க்க முடிவு செய்தது. அமெரிக்க அதிபர்  Woodrow Wilson வெள்ளை மாளிகையில் இருந்து ஒரு தந்தியை அனுப்பினார். தந்தி கிடைத்த சில மணி நேரத்தில் கம்போ குன்று தகர்க்கப்பட்டது. அடுத்த ஆண்டே பனாமா கால்வாய் பணிகள் முடிவடைந்து, ஆகஸ்ட் மாதம் கப்பல் போக்குவரத்துக்கு பனாமா திறக்கப்பட்டது.

இது தொடர்பான செய்திகள் :