1913 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி

Home

shadow

        பயணிகள் அமருவதுக்கு என்று தனிப்பகுதியும் பொருட்கள் வைப்பதற்கு என்று தனிப்பகுதியும் இதில் இருந்தது. (Hudson Motor) ஹட்சன் நிறுவனம் நான்கு கதவு கொண்ட (sedan)  செடன் வகை கார்களை தயாரித்து, பல நிறுவனங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தது. 1909 ஆம் ஆண்டு அமெரிக்க நகரமான (Detroit) டெட்ராய்ட்டை சேர்ந்த தொழிலதிபர்கள் இணைந்து ஹட்சன் மோட்டார் நிறுவனம் ஆரம்பித்தனர். ஆயிரம்டாலருக்கு குறைவாக உள்ள காரை தயாரிக்க அதன் தலைவர் ராய் சாபின் முடிவு செய்தார்.

          இந்த நிறுவனத்துக்கு (Joseph L. Hudson) ஜோசப் எல். ஹட்சன் என்ற நபர் பொருளுதவி செய்ததால் ஹட்சன் மோட்டார் நிறுவனம் என பெயரிடப்பட்டது. இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பான (Hudson Twenty) ஹட்சன் ட்யூட்டி கார், அமெரிக்காவில் பெரும் வரவேற்பு பெற்றது. மற்ற கார் நிறுவனங்களை விட ஹுட்சனின் என்ஜின்-கள்வலிமை வாய்ந்தவையாக இருந்தன. பல புதுமையான தொழில் நுட்பங்கள் ஹட்சன் கார்களில் இணைக்கப்பட்டதால், ஹட்சன் நிறுவனம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்தது. 1954 ஆம் ஆண்டு ஹட்சன் நிறுவனம் வேறு நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு அமெரிக்கன் மோட்டார்ஸ் நிறுவனமாக மாறியது.

 

இது தொடர்பான செய்திகள் :