1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் நாள்

Home

shadow

             

                       William Howard Taft அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். அமெரிக்காவின் ஓஹயோ மாகாணத்தில் 1857 ஆம் அண்டு செப்டம்பர் மாதம் Howard Taft பிறந்தார். வில்லியம் டஃப்ட் புத்திசாலித்தனமான குழந்தையாக இல்லாவிட்டாலும் கடின உழைப்பாளியாக இருந்தார். சட்டம் பயின்றார். Ohio மாகாணத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். பின்னர் மாகாண நீதிபதியாகவும் பதவியேற்றார். உச்சநீதிமன்ற நீதிபதியாக வேண்டும் என்பதே அவருடைய லட்சியமாக இருந்தது. 1900 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் மக்களாட்சியை உருவாக்க அனுப்பப்பட்ட அமெரிக்க குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1904ஆம் ஆண்டு அமெரிக்காவின் போர் துறை அமைச்சராக பதவியேற்றார்.  1908 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த Roosevelt தான் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடப்போவது இல்லை என அறிவித்தார். Roosevelt  தனக்கு அடுத்து Taft தான் அதிபராக வேண்டும் என விரும்பினார். அதிபர் தேர்தலில் போட்டியிட்ட Taft வெற்றிபெற்று 1909ஆம்ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்க அதிபரானார். 1913ஆம் ஆண்டு வரை அதிபராக பதவிவகித்தார். அதற்கு பின் சட்ட கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார். உச்சநீதிமன்ற நீதிபதியாகவேண்டும் என்ற அவருடைய நீண்ட கால கனவு 1921 ஆம் ஆண்டு நிறைவேறியது. அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக William Howard Taft நியமிக்கப்பட்டார். அமெரிக்காவின் அதிபராகவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்த ஒரே நபர் என்ற பெருமையை பெற்றார்.


இது தொடர்பான செய்திகள் :