1923ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி

Home

shadow

        1922ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சவ்ரி சவ்ரா என்ற இடத்தில் நடந்த ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றவர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதனை அடுத்து அவர்கள் காவல் நிலையத்தை தாக்கி தீ வைத்தனர். அந்த சம்பவத்தில் இருபதுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் உயிரிழந்தனர். இந்த வன்முறை சம்பவத்தால் மனம் வருந்திய மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கம் தேசிய அளவில் நிறுத்தப்படுவதாக அறிவித்தார். காந்தியின் இந்த அறிவிப்பை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர் எதிர்த்தனர். இதனைத் தொடர்ந்து சித்ரஞ்சன் தாஸ் மற்றும் மோதிலால் நேரு உள்ளிட்ட தலைவர்கள் 1923ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி, சுய ஆட்சி கோரும் ஸ்வராஜ் கட்சியைத் தொடங்கினர். தேர்தலில் போட்டியிட சித்தரஞ்சன் தாஸும் மோதிலால் நேருவும் முடிவு செய்தனர். அதன்படி பெங்கால் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட ஸ்வராஜ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வென்றது. 1925 ஆம் ஆண்டு சித்ரஞ்சன் தாஸ் மறைந்த பின்னர் ஸ்வராஜ் கட்சி பலவீனமடைந்தது.

இது தொடர்பான செய்திகள் :