1929 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் நாள்

Home

shadow


                          முதன்முறையாக ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன. ஆஸ்கார் விருதுகள் என்று பொதுவாக அழைக்கப்படும் அகாடமி விருதுகள் அமெரிக்காவின் திரைத்துறைக்கான மிக முக்கிய விருதுகளுள் ஒன்றாகும். உலக அளவில் சினிமா துறையில் நடத்தப்படும் விருது விழாக்களில் முதன்மையான விழாவாக இது கருதப்படுகிறது. சிறந்த இயக்குனர், சிறந்த திரைப்படம் என பல்வேறு பிரிவுகளில் அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது. ஹாலிவுட் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் 270 பேர் முன்னிலையில் இவ்விழா முதன்முறையாக நடந்தது. அன்று 15 விருதுகள் மட்டுமே வழங்கப்பட்டன. இவ்விருதிற்கான வெற்றியாளர்கள் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டனர். 1930 ஆம் ஆண்டு வாக்கிலேயே ஆஸ்கார் விருதுக்கு உலக அளவில் பெருத்த வரவேற்பு கிடைத்தது. இன்றுஇந்த விருதுகள் சினிமா துறை மட்டுமல்லாமல் அனைத்து மக்களும் ஆவலோடு எதிர்பார்க்கக்கூடிய ஒன்றாக உள்ளது.

இது தொடர்பான செய்திகள் :