1930 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் நாள்

Home

shadow


      நீல் ஆம்ஸ்ட்ராங் பிறந்தார். மனித குல வரலாற்றிலேயே யாருக்கும் கிடைக்காத சிறப்பை பெற்றவர் நீல் ஆம்ஸ்ட்ராங். புவியில் ஒவ்வொருவரும் சாதனை படைத்துக் கொண்டிருக்க, புவிக்கு வெளியே நிலவில் காலடி பதித்த முதல் மனிதன் எனும் சிறப்பை பெற்றார் நீல் ஆம்ஸ்ட்ராங். 1930-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தில் உள்ள வாபகொனேடா எனும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தை கணக்கு தணிக்கையாளராக பணி புரிந்து வந்தார். சிறு வயது முதலே பறப்பதில் ஆர்வம் கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங் பள்ளி படிப்பை முடித்ததும்  Purdue University-ல் ஏரோனாட்டிக்கல் இஞ்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தார். பின்னர் 1949-ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் விமானியாக இணைந்த அவர், கொரிய போரில் பங்கேற்றார். போருக்கு பின்னர் கடற்படையில் இருந்து விலகிய ஆம்ஸ்ட்ராங், மீண்டும் தனது கல்லூரி படிப்பை தொடர்ந்தார். சிறிது காலம் சோதனை விமானியாக பணியாற்றிய ஆம்ஸ்ட்ராங், 1962-ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவில் இணைந்தார். 1966-ஆம் ஆண்டு ஜெமினி 8 விண்கலத்தில் தனது முதல் விண்வெளி பயணத்தை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து 1969-ஆம் ஆண்டு அப்போலோ 11 விண்கலம் மூலம் நிலவுக்கு பயணம் மேற்கொண்டு, நிலவில் காலடி பதித்த முதல் மனிதன் எனும் சிறப்பை பெற்றார். Michael Collins, மற்றும் Buzz Aldrin. ஆகியோரும் ஆம்ஸ்ட்ராங் உடன் இந்த பயணத்தை மேற்கொண்டனர். நாசாவில் இருந்து 1971-ஆம் ஆண்டு விலகிய ஆம்ஸ்ட்ராங் சில காலம் பேராசிரியராக பணி புரிந்தார். 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். (நீல் ஆம்ஸ்ட்ராங் பிறந்தார்)

இது தொடர்பான செய்திகள் :