1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.

Home

shadow

1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி

மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார். 1835 ஆம் ஆண்டு முதல் ஆங்கிலேயர்கள், இந்தியாவில் உப்பு உற்பத்திக்கு வரி விதித்தனர். இதன்மூலம் கடற்கரையோரம் வாழும் மக்கள் உப்பு உற்பத்தி செய்து, உபயோகிப்பதற்கு கட்டுப்பாடுகள் வந்தன. வரி கொடுக்காமல் உப்பு உற்பத்தி செய்தல் சட்ட விரோதமானது என அறிவிக்கப்பட்டது. இது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்த சூழலில் மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கினார். அதன் ஒரு பகுதியாக தண்டி யாத்திரை என்றழைக்கப்படும் உப்பு சத்யா கிரகத்தை தொடங்கினார். 1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி சபர்மதி ஆஸ்ரமத்தில் தொடங்கிய இந்த யாத்திரை 24 நாட்களுக்கு பின் ஏப்ரல் 6ஆம் தேதி கடற்கரை கிராமமான தண்டியில் முடிவு பெற்றது. ஒரு நாளுக்கு பத்து மைல் என  240 மைல்கள் நடைபயணம் மேற்கொண்ட மகாத்மா காந்தியுடன் மக்களும் நடந்து சென்றனர். யாத்திரையின் முடிவில் பிரிட்டிஷ் சட்டத்தை மீறி வரி கட்டாமல் உப்பு தயாரித்த காந்தி உள்ளிட்ட அனைவரும் கைதுசெய்யப்பட்டனர்.

இது தொடர்பான செய்திகள் :