1933 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி

Home

shadow


அமெரிக்க அதிபரான பின் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் ரேடியோ மூலம் முதன் முதலாக நாட்டு மக்களிடையே உரையாற்றினார். தன்னுடைய அரசின் பணிகளை மக்களிடையே கொண்டு செல்வதில்தான் நிர்வாகத்தின் வெற்றி உள்ளது என பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் கருதினார். இதற்கு ரேடியோவை உபயோகப்படுத்த முடிவு செய்தார். இவ்வாறு அரசியல் ஆதாயங்களுக்காக ரேடியோவை உபயோகப்படுத்தும் யோசனை முதன் முறையாகத் தோன்றியது பிராங்க்ளின் ரூஸ்வெல்டுக்குத் தான் எனக் கூறலாம். 1930களில் அமெரிக்காவில் பெரும்பாலான பத்திரிகைகளின் கட்டுப்பாடு எதிர்க்கட்சிகளின் வசமே இருந்தது. அதனால் அதிபராக பதவியேற்ற சில நாட்களிலே ரேடியோவில்  உரையாற்ற தொடங்கினார் Roosevelt. ரேடியோ வழியாக தனது அரசின் கொள்கைகளையும், திட்டங்களையும் மக்களுக்கு எடுத்துக் கூறினார். இதன் மூலம் அமெரிக்க மக்களுடனான தனது உறவை வலுப்படுத்தினார். 1933 ஆம் ஆண்டு முதல் 1944ஆம் ஆண்டு வரை 28 முறை பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் ரேடியோவில் உரையாற்றியுள்ளார். இதனை வரலாற்றாளர்கள்  Fireside chats என அழைகின்றனர். 

இது தொடர்பான செய்திகள் :