1938 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 தேதி

Home

shadow

ஹிட்லரை சந்தித்தார் ஆஸ்திரியா பிரதமர் Schuschnigg. ஆஸ்திரியா நாட்டில் பிறந்த ஹிட்லர் ஜெர்மனியின் அதிபரானார். ஜெர்மனியைத் தவிர ஆஸ்திரியா உள்ளிட்ட சில நாடுகளிலும், ஜெர்மன் மக்கள் அதிக அளவில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் அனைவரையும் இணைத்து, ஒன்றிணைந்த ஜெர்மனியை உருவாக்க ஹிட்லர் எண்ணினார். 1930ஆம் ஆண்டு ஆஸ்திரியாவில் நடைபெற்ற தேர்தலில் ஆஸ்திரிய நாஸி கட்சி, வெற்றி பெறவில்லை. ஆனால் ஜெர்மனியுடன் ஆஸ்திரியா இணைய வேண்டும் என்ற விருப்பும் அந்நாட்டு மக்களிடையே பரவியது. ஜனநாயக முறையில் ஜெர்மனியுடன் ஆஸ்திரியா இணைய வாய்ப்புகள் இருந்தன. ஆனால் அதற்குள் நாஸி படையினர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தனர். ஹிட்லரின் அடக்கு முறையால் ஆஸ்திரிய மக்கள் பெரிதும் அச்சமடைந்தனர். 1934 முதல் 1938வரை ஆஸ்திரிய நாஸி படையினர்ஆஸ்திரிய அரச நிறுவனங்கள் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தினர். இதில் 800 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கிடையில் ஹிட்லர் 1936ஆம் ஆண்டு நான்காண்டு திட்டத்தை தீட்டினார். இதன் படி ஜெர்மனியை 1940ஆம் ஆண்டுக்குள் உலகப் போருக்குத் தயாராக்கும்முயற்சிகளில்ஈடுபட்டார்போர்க்கு தயாராக அதிக அளவில் பொருளாதார உதவி தேவைப்பட்டது. இரும்பு, வேலையாட்கள் உட்பட பல்வேறு தேவைகளுக்கு ஆஸ்திரியா மீது ஜெர்மனின் ஆதிக்கம் அவசியமானது. ஹிட்லரின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி அவரைச்சந்தித்த ஆஸ்திரியா பிரதமர் Schuschnigg ஹிட்லரின் பல்வேறு நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டார்.

இது தொடர்பான செய்திகள் :