1939 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் நாள்

Home

shadow


        ஆலயப்பிரவேச சட்ட மசோதா  நிறைவேற்றப்பட்டதுதீண்டாமை எனும் கொடிய நடைமுறைய அகற்றவும், ஹரிஜன மக்களின் முன்னேற்றத்திற்காவும் உழைத்தவர் காந்தியவாதியான வைத்தியநாத ஐயர். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் ஹரிஜன மக்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படவில்லை. இதனை எதிர்த்து ஹரிஜன மக்கள் ஆலயத்திற்குள் செல்ல வழி வகுக்கும் சட்டத்தினை இயற்ற வேண்டுமென வலியறுத்தி வந்தார். ஆனால் சட்டம் இயற்றும் விவகாரம் இழுத்துக் கொண்டு செல்லவே, ஹரிஜன ஆலய பிரவேசத்திற்காக பொதுஜன மக்களின் ஆதரவை திரட்டும் பணியில் இறங்கினார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தினருடன் 1939 ஜுலை 08 ஆம் தேதி கோயிலுக்குள் நுழைந்து வழிபாடு செய்தார். இதன் காரணமாக சிலர் உருவாக்கிய பிரச்சனைகளையும் நீதிமன்ற வழக்குகளையும் இவர் எதிர்கொண்டார். இந்த ஆலயப்பிரவேச நிகழ்வையடுத்து அப்போதைய முதல்வர் இராஜாஜி ஆலய பிரவேச சட்டத்தை அவசர சட்டமாக ஆளுநர்  பிரகடனம் செய்ய வழிவகை செய்தார். இதன் மூலம் 1939ஆம் ஆண்டு ஜூலை11ல் சென்னை மாகாண ஆலயப்பிரவேச சட்ட மசோதா  வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

(ஆலயப்பிரவேச சட்ட மசோதா  நிறைவேற்றம்  )

இது தொடர்பான செய்திகள் :