1940 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள்

Home

shadow


         முதல் மெக்டொனல்ட்ஸ் உணவகம் திறக்கப்பட்டது. உலகின் முன்னணி துரித உணவு விடுதிகளில் ஒன்றாக மெக்டொனல்ட்ஸ் விளங்குகிறது. ரிச்சர்ட் மற்றும் மாரிஸ் மெக்டொனால்ட் என்பவர்களால் இந்த நிறுவனமானது ஆரம்பிக்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தின் சான் பெர்னார்டினோ எனும் இடத்தில் 1940ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதலில் அமெரிக்காவில் மட்டும் திறக்கப்பட இந்த துரித உணவகம் இன்றும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளது. சுமார் 3.5 லட்சம் பேர் இந்த நிறுவனத்தில் பணி புரிகின்றனர். உலகம் முழுவதும் ஒரு நாளைக்கு 6 கோடிக்கும் அதிகமானோர் இந்த உணவகத்திற்கு வருகை புரிகின்றனர்.

இது தொடர்பான செய்திகள் :