1942 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி

Home

shadow


      போருக்காக நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டமான K-9 Corps அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. முதல் உலகப்போரின்போது தகவல் பரிமாற்றத்துக்காக பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட நாய்கள் உபயோகப்படுத்தப்பட்டன. கடுமையான சூழலில் பணிபுரிந்த ராணுவ வீர்களுக்கு இந்த நாய்கள் ஆறுதலாகவும் அமைந்தன. முதல் உலகப்போர் முடிவடைந்த நிலையில் பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டரின் டின் டின் (Rin Tin Tin) என்ற போர் நாய்க்குட்டி மிகவும் பிரபலமானது. ஜெர்மன் ஷெப்பர்ட் வகையைச் சேர்ந்த இந்த நாய்க்குட்டி அமெரிக்காவுக்கு எடுத்து செல்லப்பட்டு 1922ஆம் ஆண்டு ஒரு திரைப்படத்திலும் நடித்தது. அதிலிருந்து ஜெர்மன் ஷெப்பர்ட் (German Shepherd) வகை நாய்கள் மிகவும் பிரபலமாயின. ஆனால் இரண்டாம் உலகப் போர் வரை அமெரிக்கா, போருக்காக நாய்களைப் பயிற்றுவிக்கவில்லை. ஆனால் போரில் நாய்களின் அவசியத்தையும் பயன்பாட்டையும் இரண்டாம் உலகப்போரின்போது உணர்ந்தது அமெரிக்கா. ஆரோக்கியமான நாய்கள் இருந்தால் அவற்றை போருக்காக தந்து உதவுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தது அமெரிக் நாய்வளர்ப்போர் சங்கம். அமெரிக்க ராணுவத்தின் QMC எனப்படும் குவாட்டர்மாஸ்டர் கார்ப்ஸ்க்கு (Quartermaster Corps) நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் பணி வழங்கப்பட்டது. அதற்காக K-9 Corps திட்டம் தொடங்கப்பட்டது. 12 வாரங்கள் வரை நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, போரில் வீரர்களுக்கு உதவி செய்ய அவை அனுப்பப்பட்டன.

இது தொடர்பான செய்திகள் :