1943 ஆம் ஆண்டு ஜனவரி  12  ஆம் தேதி

Home

shadow

           ஜெர்மன் முற்றுகையை உடைத்து (Leningrad) லெனின்கிராடு  நகருக்குள் சோவியத் படை நுழைந்தது. Ladoga ஏரியின் ஊடாக சிறு பாதை அமைத்து சோவியத் படை லெனின்கிராடு நகரில் நுழைந்தது. தற்போது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என அழைக்கப்படும் லெனின்கிராடு நகரம் ரஷ்யாவின் பழைய தலைநகராக இருந்தது.  இரண்டாவது உலகப்போரின் போது ரஷ்யா மீது படையெடுத்த ஹிட்லர் லெனின்கிராடு நகரத்தை தாக்கி அழிப்பதற்கு பதில் அதனை முற்றுகையிட முடிவு செய்தார். அதன்படி  Leningrad  நகரத்தை 1941 ஆம் ஆண்டு செப்டம்பர்  8 ஆம் தேதி ஜெர்மன் படை முற்றுகையிட்டது.

           இதனால் அந்த நகர மக்கள் உயிர் வாழ்வதற்கு தேவையான பொருட்களை நகருக்குள் கொண்டு செல்ல முடியவில்லை. குளிரில் இருந்து காத்துக்கொள்ள தேவைப்பட்ட எண்ணெய், நிலக்கரி, உணவுப்பொருட்கள் போன்றவை விரைவிலேயே தீர்ந்துவிட்டன. குளிரும் பசியும் அவர்களின் மிகப்பெரிய எதிரிகளாக இருந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பனி உறைந்து காணப்பட்டத்தால் இறந்தவர்களை புதைக்கக்கூட வழியில்லாமல் மக்கள் திண்டாடினர். (Ladoga)லடோக  ஏரி உறைந்ததால் அதன் வழியே லெனின்கிராடுக்குள் சிறிய வண்டிகள் மூலம் உணவுப்பொருளை 1943 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சோவியத் கொண்டுவர ஆரம்பித்தது. குழந்தைகள், முதியவர்கள், உடல் நிலை பாதிக்கப்பட்டவர்களை அதே வழியில் மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மொத்தம் 872  நாட்கள் முற்றுகை தொடர்ந்தது. 1944 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி ஜெர்மன் படையை வீழ்த்தி சோவியத் படை லெனின்கிராடு  நகரத்தை மீட்டது.

இது தொடர்பான செய்திகள் :