1945ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் நாள்

Home

shadow

    

      நான்கு முறை அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்த Franklin D. Roosevelt மறைந்தார். 1882ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் பிறந்த ரூஸ்வெல்ட் சட்டம் படித்து வழக்கறிஞராக பணியாற்றினார். 1910ஆம் ஆண்டு நியூயார்க் மகாண செனேட் சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1921ஆம் ஆண்டு  முடக்குவாத நோய் காரணமாக அவரது கால்கள் செயலிழந்தன. இருப்பினும் அவரது அரசியல் பணி தொய்வடையாமல் தொடர்ந்தது. 1928 ஆம் ஆண்டு நியூயார்க்-கின் கவர்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவில் அப்போது நிலவிய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வண்ணம் பல்வேறு திட்டங்களை தீட்டினார்.  1932 நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறையாக அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். Roosevelt அதிபராக பதவியேற்ற போது, அமெரிக்காவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவியது. அதனை சரி செய்யும் வகையில் Roosevelt பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். அமெரிக்க பொருளாதாரம் சீரடைந்ததால், 1936ஆம் ஆண்டு மக்கள் அவருக்கு மீண்டும் அதிபராக வாய்ப்பு வழங்கினர். அதன் பின் 1940ஆம் ஆண்டு மற்றும் 1944 ஆம் ஆண்டுகளில் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1941ஆம் ஆண்டு இவரது தலைமையில் தான் அமெரிக்கா ஜப்பான் மீது போர் தொடுத்தது. ரூஸ்வெல்ட், மூளை ரத்தக்கசிவு காரணமாக 1945ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் நாள் மறைந்தார். 

இது தொடர்பான செய்திகள் :