1945ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி

Home

shadow

புடாபெஸ்ட் நகரம் சோவியத் படைகளிடம் சரணடைந்தது. 1944 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம். உலகப் போர் முடிவடையும் தருவாய். உலகப் போரில் பெருத்த சேதமடைந்திருந்த ஹங்கேரி நாடு போரில் இருந்து வெளியேறுவது என முடிவு செய்திருந்தது. அந்த சமயத்தில் ஜெர்மன் படைகள் ஹங்கேரிக்குள் நுழைந்தன. ஜெர்மன் படைகளை எதிர்த்து ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்ட்டை சோவியத் படைகள் ஐம்பது நாட்கள் முற்றுகையிட்டிருந்தன. புடாபெஸ்ட்டை நகரத்தை முற்றுகையிலிருந்து ஹங்கேரி மற்றும் ஜெர்மன் படைகள் காத்து வந்தன. டிசம்பர் மாதம் தொடங்கிய முற்றுகை ஐம்பது நாட்கள் தொடர்ந்தது. ராணுவ நடவடிக்கையாலும், உணவு பற்றாக்குறையாலும் பொது மக்கள் 38,000 பேர் உயிரிழந்தனர். 1945 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி புதபெஸ்ட் நகரம் சோவியத் படைகளிடம் சரணடைந்தது.இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியை எதிர்த்து போரிட்ட நேச நாடுகளுக்கு இதுமுக்கிய வெற்றியாக கருதப்பட்டது.

இது தொடர்பான செய்திகள் :