1946ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி

Home

shadow


 

          ஐக்கிய நாடுகள் சபையின் முதல் கூட்டம் லண்டனில் நடைபெற்றது. இரண்டாம் உலகப் போருக்கு பின் உலக நாடுகள் இணைந்து உலக அளவில் ஒரு கூட்டமைப்பை உருவாக்க முடிவெடுத்தன. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரத்தில் 1944ஆம் ஆண்டு நடந்த கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1945ஆம் ஆண்டு 51 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐக்கிய நாடுகள் சபை உருவானது. தற்போது 193 நாடுகள் இதில் உறுப்பினர்களாக உள்ளன. சர்வதேச சமாதான மற்றும் பாதுகாப்பு, மனித உரிமைகளை மேம்படுத்துதல், சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி, சுற்றுச்சூழலை பாதுகாத்தல், பஞ்சம், இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குதல் உள்ளிட்டவை இதன் முக்கியப் பணிகளாகும். ஐக்கிய நாடுகள் சபையின் முதல் பொது சபை கூட்டம் 1946ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி லண்டனில் உள்ள Westminster Central Hall-இல் நடைபெற்றது. 

இது தொடர்பான செய்திகள் :