1947 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி

Home

shadow


உலக நாடுகளில் கம்யூனிஸம் பரவுவதை தடுப்பதற்காக Truman சித்தாந்தம் பிரகடனப்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப்போர் முடிவடைந்தாலும், உலக வல்லரசுகளிடையே பனிப்போர் தொடர்ந்தது. சோவியத் யூனியனின் விரிவாக்கத்தை தடுப்பதும், கம்யூனிஸக் கோட்பாடுகளின் பரவலைத் தடுத்து நிறுத்துவதும் முக்கியமானவை என அமெரிக்கா கருதியது. அதற்காக அமெரிக்க அதிபராக இருந்த Harry Truman, Truman Doctrine-ஐ உருவாக்கினார். Truman Doctrine என்பது 1947ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை. இதன் முக்கிய நோக்கு பனிப் போர் சமயத்தில் சோவியத் யூனியனின் புவிசார் அரசியல் விரிவாக்கத்தை தடுப்பதாக இருந்தது. 1948 ஆம் ஆண்டு இந்த கோட்பாடு மேலும்  விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது சோவியத்-ஆல் Greece மற்றும் Turkey நாடுகளுக்கு இருந்த அச்சுறுத்தல்களை முறியடிக்க அமெரிக்கா முடிவு செய்தது. ஆனால் நேரடி ராணுவ தலையீடு செய்ய அமெரிக்க விரும்பவில்லை. அதற்கு பதிலாக அந்த நாடுகளுக்கு பொருளாதார உதவிகளை செய்ய முடிவு செய்தது. சோவியத் அச்சுறுத்தல் உள்ள நாடுகளுக்கு உதவுவதே Truman Doctrine-இன் முக்கிய அம்சமாக இருந்தது. இதுவே பின்னாளில் NATO எனப்படும் North Atlantic Treaty Organization உருவாக காரணமாக இருந்தது.

இது தொடர்பான செய்திகள் :