1950ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி - வட கொரிய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா

Home

shadow


முதல் முறையாக ஒரு போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது மற்றொரு போர் விமானம். இந்த நிகழ்வு வட கொரியா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு இடையே நடைபெற்ற கொரியா போரின் போது நடந்தது. 1905ஆம் ஆண்டு முதல் ஜப்பான் நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது கொரிய பேரரசு. இரண்டாம் உலகப்போருக்கு பின் நேச நாடுகளான அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் கட்டுப்பாட்டில் சென்றது கொரியா. குறிப்பாக வடக்கு பகுதி, சோவியத் கட்டுப்பாட்டின் கீழும், தெற்கு பகுதி அமெரிக்காவின் காட்டுப்பாட்டிலும் சென்றது. 1948ஆம் ஆண்டு இரண்டு பகுதிகளையும் இணைத்து, ஒன்றுபட்ட கொரியாவை உருவாக்க சோவியத் மற்றும் அமெரிக்கா இடையே உடன்பாடு எற்படவில்லை. அதன் பின் வட கொரியா மற்றும் தென் கொரியா என இரு வேறு நாடுகளாக பிரிந்தது கொரியா. வட கொரியாவின் புதிய பிரதமராக பதவியேற்ற Kim il-Sung, இரு பகுதிகளையும் இணைத்து கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் ஒன்றுபட்ட கொரியாவை உருவாகும் நோக்கில் 1950ஆம் ஆண்டு கொரிய போரை தொடங்கினார். தென் கொரியாவுக்கு உதவியாக அமெரிக்காவும், வட கொரியாவுக்கு உதவியாக சோவியத்தும் சீனாவும் களமிறங்கின. கொரிய போரின் போது, அமெரிக்காவின் F-80 ரக போர் விமானம் ஒன்று வட கொரியாவின் MiG-15 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது. நடுவானில் ஒரு போர் விமானம் மற்றொரு போர் விமானத்தை சுட்டது இதுவே உலக வரலாற்றில் முதல் முறை.

இது தொடர்பான செய்திகள் :