1957ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23.ஆம் நாள்

Home

shadow


        அரசல் அலுவல் மொழியாக அரசு நிர்வாகத்தில் எல்லா மட்டங்களிலும் பயன்படும் மொழி ஆட்சிமொழி அல்லது அலுவலக மொழி என சொல்லப்படுகிறது. மக்கள் தம் எண்ணங்களை தடங்கலற்று வெளிப்படுத்த தாய்மொழியே தகுந்த ஆட்சி மொழியாகும் ஆதலால் மக்களின் நலனுக்காக ஆட்சிபுரியும் அரசு நிர்வாகம், மக்கள் மொழியில் நடைபெறுவதே முறை என்று தமிழகத்தில் ஆட்சிமொழிச் சட்டம் 27.12.1956 ஆம் ஆண்டு  நிறைவேற்றப்பட்டு 19.1.1957ஆம் ஆண்டு ஆளுநரின் இசைவு பெற்று, ஜனவரித் திங்கள் 23-ஆம் நாளன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேறிய பிறகு 1957ஆம் ஆண்டு ஆட்சிமொழிக் குழுவை அரசு ஏற்படுத்தியது. அரசு அலவலகங்களில் தமிழ் மொழி ஆட்சிமொழியாகப் பயன்படுத்தப்படுவதற்குரிய நடவடிக்கைகளைத் தமிழ் வளர்ச்சித் துறை மேற்கொண்டு வருகிறது. இதன் முக்கியப் பணியாகத் தலைமைச் செயலகத் துறைகளிலும், துறைத் தலைமை அலுவலகங்களிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் மண்டல மற்றும் மாவட்ட நிலை அலுவலகங்களிலும் ஆய்வுகள் செய்யப்படுகின்றன. தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய பகுதிகளிலும் இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் தமிழ் அரச அலுவலக மொழியாக இருக்கிறது.

இது தொடர்பான செய்திகள் :