1959 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி

Home

shadow

அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்த (Fulgencio Batista)ஃபல்கென்சியோ பாடிஸ்டா-வின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்துப் போராடினார் வழக்கறிஞரான ஃபிடல் காஸ்ட்ரோ, 1959 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி அதிபர் Batista கியூபாவை விட்டு வெளியேறினார். இது அமெரிக்காவுக்கு வருத்தத்தை தந்தது.ஃபிடல் காஸ்ட்ரோ வழி நடத்தும் புதிய அரசு, கம்யூனிஸம் சார்ந்ததாக இருக்கலாம் என்ற சந்தேகம் அமெரிக்காவுக்கு இருந்தது. இருந்தபோதிலும் அப்போதைய சூழலில் ஃபிடல் காஸ்ட்ரோவின் அரசை ஏற்பதே ராஜதந்திரம் எனக் கருதிய அமெரிக்கா, அப்போதைக்கு காஸ்ட்ரோவின் அரசை அங்கீகரித்தது. இருந்தபோதிலும் அமெரிக்கா கியூபா இடையேயான உறவு மிக விரைவில் மோசமடைந்தது. கியூபாவில் அமெரிக்காவின் சொத்துக்கள் நாட்டுடமையாக்கப்பட்டன. கம்யூனிஸ நாடுகளுடன் கியூபாவின் கொண்டிருந்த நெருங்கிய தொடர்பு அமெரிக்காவை கோபம் கொள்ளச் செய்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் கியூபாவுடனான உறவைத் துண்டித்தது அமெரிக்கா.

இது தொடர்பான செய்திகள் :