1959 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி

Home

shadow


     திபெத் பகுதியின் தலைநகரான Lhasa நகரத்தில் சீனா ஆதிக்கத்துக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. 1951 ஆம் ஆண்டு திபெத் சீனா இடையே பதினேழு புள்ளி ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் பின், திபெத் பகுதி சீனாவின் கட்டுப்பாட்டுக்கு சென்றது. 1956 ஆம் ஆண்டு முதல் சீனாவுக்கு எதிராக திபெத்தில் பல போராட்டங்கள் நடந்தன.  சீனா அரசு நடத்திய ஒரு விருந்தில் கலந்து கொள்ளும் படி தலைலாமாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மார்ச் பத்தாம் தேதி கலந்துகொள்வதாக தலைலாமா அறிவித்தார்.  அவரின் பாதுகாப்பை சீனா வீரர்களே பார்த்துக்கொள்வர் என கூறப்பட்டது. சீன அரசால் தலைலாமா கைது செய்யப்படுவார் என வதந்தி பரவியது. இதனால் கோபமடைந்த ஆயிரக்கனக்கான திபெத்தியர்கள் 1959 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி தலைலாமாவின் மாளிகையை சுற்றி வளைத்தனர். திபெத் எழுச்சிகுக்கு இதுவே முக்கிய காரணமாக அமைந்தது. போராட்டக்கார்களின் கோபம், தலைலாமாவை காக்க தவறிய திபெத் அதிகாரிகள் மீது தான் முதலில் பாய்ந்தது. இதனை தொடர்ந்து திபெத் தனி நாடு என மார்ச் 12 ஆம் தேதி போராட்டக்கார்கள் அறிவித்தனர். இதனை தொடர்ந்து, சீன படையுடன் ஏற்பட்ட சண்டையில் திபெத் படை தோல்வி அடைந்தது. திபெத் எழுச்சி நாள் என இந்த தினத்தை புலம் பெயர்ந்த திபெத் மக்கள் அனுசரிக்கின்றனர்.


இது தொடர்பான செய்திகள் :