1960ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி
பூமியின் சுற்றுப்பாதையில் முதல் திசை அறியும் செயற்கைக்கோள் ட்ரான்சிட் 1பி (transit 1B) ஏவப்பட்டது. ட்ரான்சிட் செயற்கைக்கோள் அமைப்பு
NAVSAT அல்லது NNSS என்று அழைக்கப்பட்டது. முதல் முறையாக செயற்கைகோள்கள் தங்களது இருப்பிடத்தையும்
புவியின் இடநிலை நிலைபாட்டையும் கண்டறியும் தன்மை கொண்டதாக உருவாக்கப்பட்டன. இந்த SATELITTE NAVIGATION SYSTEM அமைப்பானது முதன்மையாக அமெரிக்க கடற்படையால்
துல்லியமாக நீர்மூழ்கி கப்பல்களின் திசை
அறிய பயன்படுத்தப்பட்டது. திசை அறியும்
செயற்கைக்கோள் அமைப்பின் முதல் செயகைக்கோள் ட்ரான்சிட் 1ஏ(transit
1A) செயற்கைக்கோள் 1958ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விண்ணில்
ஏவப்பட்டது. ஆனால் அந்த செயற்கைக்கோள் பூமியின் சுற்றுப்பாதையை அடைய தவறிவிட்டது.
அதன் பின் 1960ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்
13ஆம் நாள் ட்ரான்சிட் 1பி(transit
1B) செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது. அதன் பின் இந்த செயற்கைக்கோள் 1964ஆம் ஆண்டு வரை அமெரிக்க கடற்படையால் திசை அறிய பயன்படுத்தப்பட்டது.