1961ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் நாள்

Home

shadow


     விண்வெளியிக்கு சென்ற முதல் மனிதர் என்ற பெயரைப் பெற்றார் யூரி காகரின். யூரி அலெக்சியேவிச் ககாரின் (Yuri Alekseyevich Gagarin) விண்ணில் வலம் வந்த  ரஷியாவை சேர்ந்த முதல் விண்வெளி வீரர் என்ற சிறப்புடையவர். ககாரின் 1961 ஏப்ரல் 12 அன்று சோவியத் ஒன்றியத்தின் வசுத்தோக்-விண்கலத்தில் சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் பயணம் செய்தார். 1960 ஆம் ஆண்டு மனிதனை விண்ணுக்கு அனுப்பும் சோவியத் விண்வெளித் திட்டத்தில் இணைந்துகொண்ட 20 விண்வெளி வீரர்களில் ஒருவரானார் யூரி. இவர்களுக்கு அங்கு உடலியல் ரீதியிலும் உளவியல் ரீதியிலும் மிகவும் கடுமையான பயிற்சி கொடுக்கப்பட்டது. கடும் பயிற்சிக்குப் பின்னர் ககாரின்கெர்மன் டீட்டோவ் ஆகிய இருவரும் விண்வெளிப் பயணத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார்கள். இவர்களில் ககாரின்  விண்வெளியில் பயணிக்கும் முதல் மனிதராக அனுப்புவதற்காகத் தேர்வு செய்யப்பட்டார்விண்கலத்தில் முதன் முதல் பூமியை ஒரு முறை வலம் வந்தார்அவரது விண்கலம் 1:48மணி நேரம் பறந்து சாதனை செய்தது. ககாரின் விண்வெளிப் பயணம் செய்த  ஏப்ரல் 12 ஆம் தேதிஒரு சிறப்பு தினமாக நினைவுகூப்படுகிறது. 1962 ஆம் ஆண்டு முதல் இந்த நாள் சோவியத் ஒன்றியத்திலும் பின்னர் ரஷ்யாவிலும் மற்றும் சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்து சென்ற சில நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. 

இது தொடர்பான செய்திகள் :