1967ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் நாள் - வெளிப்புற விண்வெளி ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது

Home

shadow


வெளிப்புற விண்வெளி ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. 


விண்வெளியில் உள்ள நிலவு உள்ளிட்ட பிற கிரகங்கள் மற்றும் வெளிப்புற விண்வெளி ஆய்வில் உள்ள செயல்பாடுகளை நிர்வகிக்கும் கோட்பாடுகள் பற்றிய ஒப்பந்தமே இந்த வெளிப்புற விண்வெளி ஒப்பந்தம் ஆகும். இந்த ஒப்பந்தம் சர்வதேச விண்வெளி சட்டத்துக்கான அடித்தளத்தை அமைத்தது. வெளிப்புற ஆய்வு மற்றும் பயன்பாடுகளை கட்டுப்படுத்தி சர்வதேச விண்வெளி சட்டத்தின் விதிகளை இந்த ஒப்பந்தம் உருவாக்கியது. இந்தியா உட்பட 107 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த உடன்படிக்கை விண்வெளியை  அனைத்து நாடுகளும், ஆராய்ச்சிக்கு ஒன்றுமையாக பங்கிட்டு பயன்படுத்த வேண்டும் என்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. விண்ணின் வெளிப்புறம் மற்றும் அனைத்து கிரகங்களும் மனிதகுலத்துக்கு பொதுவான ஒன்று, எந்த தேசத்தாலும் உரிமை கோரப்பட முடியாதவை என இந்த ஒப்பந்தம் உறுதிப்படுத்தியது.


இது தொடர்பான செய்திகள் :