1968 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் நாள் - அப்போலோ 7 விண்கலம் அனுப்பப்பட்டது

Home

shadow


 

அப்போலோ 7 விண்கலம் அனுப்பப்பட்டது. விண்வெளி ஆராய்ச்சியில் முதலிடம் பிடிக்க சோவியத் யூனியன் அமெரிக்கா இடையே கடும் போட்டி நிலவி வந்தது. 


இரு நாடுகளும் பல்வேறு விண்வெளி திட்டங்களை செயல்படுத்தி வந்தன. விண்வெளிக்கு மனிதனை யார் முதலில் அனுப்புவது என போட்டி நிலவியது. அதிலும் சோவியத் யூனியன் தான் வெற்றி பெற்றது. அந்த சமயத்தில் அமெரிக்கா மெர்குரி என்ற விண்வெளி திட்டத்தை செயல்படுத்தி வந்தது. அந்த திட்டம் மூலம் ஒரு விண்வெளி வீரரை தான் விண்ணுக்கு அனுப்ப முடிந்தது. அதற்கு பின் தான் மூன்று விண்வெளி வீரர்களை அனுப்பம் வகையில் புதிய திட்டம் ஒன்று வடிவமைக்கப்பட்டது. அதற்கு அப்போலோ என்ற கிரேக்க கடவுளின் பெயரை சூட்டியது நாசா. இந்த திட்டம் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவால் 1960ஆம் ஆண்டு முதல் 1972ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட்டது. Apollo 1 திட்டத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதன் சோதனை ஓட்டத்தின் போது ஏற்பட்ட தீ விபத்தில் விண்வெளி வீரர் ஒருவர உயிரிழந்தார். அதன் பின் 21 மாதங்கள் கடும் முயற்சிக்கு பின், 1968 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் நாள் அப்போலோ 7 திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. அப்போலோ திட்டங்களில் அப்போலோ 7 விண்கலம் தான் முதல் முறையாக மனிதனை விண்வெளிக்கு அழைத்து சென்றது. மூன்று விண்வெளி வீரர்கள்  பதினோரு நாட்கள் உலகை சுற்றி வந்தனர். புவி சுற்றுப்பாதையில் இருந்து முதல் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பானது.

இது தொடர்பான செய்திகள் :