1975 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் நாள்

Home

shadow


                  எவரெஸ்ட் சிகரத்தில் முதல்முறையாக ஒரு பெண் ஏறி சாதனை படைத்தார். ஜப்பானில் பிறந்த ஜூன்கோ டாபி (Junko Tabei) 10வயதாக இருக்கும் போதே மலையேறும் பயிற்சியில் சேர்ந்தார். படிக்கும் போதே மலையேறும் குழு ஒன்றில் உறுப்பினராக சேர்ந்தார். 1969 ஆம் ஆண்டில் 'பெண்கள் மலையேறும் குழு' ஒன்றைத் தொடங்கினார். ஜப்பானில் உள்ள புஜி மலை, சுவிஸ் ஆல்ப்ஸ் மலை உள்ளிட்ட பல உயரமான சிகரங்களில் ஏறி பயிற்சி பெற்றார். பல பயிற்சிகளின் காரணமாக 1972ம் ஆண்டு ஜப்பானின் மிகச்சிறந்த மலையேறும் பெண் பயிற்சியாளர் என்ற பெயரை பெற்றார். இதையடுத்து ஜப்பானில் இருந்து வெளிவரும் யோமியுரி நாளிதழ் மற்றும் நிகான் தொலைக்காட்சி ஆகியவை இணைந்து ஜூன்கோ டாபி உட்பட 15 பெண்களை தேர்வு செய்து எவரஸ்ட் சிகரத்துக்கு அனுப்ப முடிவு செய்தன. இதற்காக அவர்களுக்கு கடுமையான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 1975ம் ஆண்டின் தொடக்கத்தில்  எவரஸ்ட் சிகரத்தில் 6 ஆயிரத்து 300 மீட்டர் உயரத்தை அடைந்து அந்த பகுதியில் கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர். அப்போது அந்த பகுதியில் தீடீரென பனிப்பாறைகள் சரிந்தன. எல்லா பெண்களும் பனிப்பாறைக்கு அடியில் புதைந்து போயினர். ஜூன்கோ டாபியும் சுயநினைவை இழந்து விட்டார். அந்த சமயத்தில் ஒரு வழிகாட்டி ஜூன்கோ டாபியை மீட்டார். அதன் பின்னர் 12 நாள் கழித்து ஜூன்கோ டாபி மட்டும் 1975ம் ஆண்டு இதே நாளில் எவரெஸட் சிகரத்தை அடைந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய உலகின் முதல் பெண் என்ற சாதனையைப் படைத்தார். இதைதொடர்ந்து மேலும் பல சாதனைகளையும் செய்தார். இப்போது 61வயதாகும் இவர் இளம் தலைமுறைப் பெண்களுக்கு வழிகாட்டியாய் உள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :