1976 ஆம் ஆண்டு ஏப்ரல்11ஆம் தேதி

Home

shadow


     ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம் தனது வெளியீடாக டெஸ்க்டாப் கணினி ஆப்பிள் 1 -ஐ 1976 ஆம் ஆண்டு ஏப்ரல்11ஆம் தேதி வெளியிட்டது. ஸ்டீவ் வோஸ்னியாக்கால் வடிவமைக்கப்பட்டு ஸ்டீவ் ஜாப்ஸ் என்பவரால் விற்பனைக்கு கொண்டு வரப்பபட்டது. மார்ச் 5, 1975 ஆம் ஆண்டு  ஸ்டீவ் வோஸ்னியாக் கார்டன் பிரஞ்சு கேரேஜில் உள்ள Homebrew கம்ப்யூட்டர் கிளப் முதல் கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தின் பேச்சில் உற்சாகம் அடைந்து ஸ்டீவ் வோஸ்னியாக்காலும் ஸ்டீவ் ஜாப்ஸ்ம் கிளப்பின் ஆர்வமுள்ள உறுப்பினர்களுக்கு கணினியின் திட்டவரைபடத்தை கொடுத்தார்கள். ஜாப்ஸ் தனது வாகனத்தையும், வோஸ்னியாக் தனது HP-65 கால்குலேட்டரையும் விற்று  ணியை துவக்கினர். 1976ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆப்பிள்1 கணினி விற்பனையை தொடங்கினார்கள். தங்களது முதல் கணினியை ஒரு பள்ளிக்கு இலவசமாக பயில  கொடுத்தனர். அதன் பின் சுமார் 200 கணினிகளை உருவாக்கி சந்தைபடுத்தினர். 1977 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி, ஆப்பிள் II அறிமுகப்படுத்தியபின், செப்டம்பர் 30, 1977 ஆம் ஆண்டு ஆப்பிள் 1 கணினியின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இது தொடர்பான செய்திகள் :