1976ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி

Home

shadow

1898 ஆம் ஆண்டு பிறந்த சூ என்லாய், 1920களில் சீனா கம்யூனிஸ கட்சியில் இணைந்து பெரும்பங்காற்றினார். விரைவில் (Mao Zedong)-மாவோ ஜெடோங் நம்பிக்கைக்கு உரியவரானார். 1930களில் ஜப்பான் தாக்குதலின் போது சீனா தேசியவாத கட்சியுடன் இணைந்து செயல்பட சூ என்லாய் யின் பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர திறமைகள், உதவின. சீனா கம்யூனிஸ கட்சி 1949ஆம் ஆண்டு வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. புதிய சீனா அரசின் முதல் பிரதமராக பதவி ஏற்றார் சூ என்லாய். 1970-களில் அமெரிக்காவுடனான உறவை புதுப்பிக்க முயற்சிகள் மேற்கொண்டார். சூ என்லாய்வும் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனும்  1972 சந்தித்து பேசியது உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சூ என்லாய் ன் பல்வேறு முயற்சிகளுக்கு பின் 1979ஆம் ஆண்டு அமெரிக்கா சீனா நாட்டை அங்கீகரித்தது. 27 ஆண்டுகள் சீனாவின் பிரதமராக இருந்த சூ என்லாய் உடல் நலக் குறைவால் 1976ஆம் ஆண்டு இதே நாளில் உயிரிழந்தார்.

இது தொடர்பான செய்திகள் :