1979 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் நாள்

Home

shadow


ஸ்கைலேப் விண்வெளி நிலையம் அழிந்தது. மனிதன் விண்வெளியில் குறிப்பிட்ட காலம் தங்கி ஆய்வுப்பணிகள் மேற்கொள்வதற்காக விண்வெளி நிலையங்கள் வடிவமைக்கப்பட்டன. அந்த வகையில், அமெரிக்காவின் முதல் விண்வெளி நிலையமான ஸ்கைலேப் 1973 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. இது சூரிய மின்னாற்றல் மூலம் இயங்கக்கூடிய தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டது. இந்த விண்வெளி நிலையமானது சாட்டர்ன் (SATURN) ஐந்து ராக்கெட்டின் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்கைலேப் விண்வெளி நிலையத்தில், விஞ்ஞானிகள் தங்கி ஆய்வு செய்வதற்கு தேவையான வசதிகள், சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆய்வகம், உள்ளிட்டவை இருந்தன. ஸ்கைலேப் விண்வெளி நிலையத்தில் இருந்த சோலார் PANEL பழுதடைந்த நிலையில் அதனை, விண்வெளியில் விஞ்ஞானிகள் சரி செய்தது அதுவே முதல் முறை.  ஸ்கைலேப்-இல் இருந்தபடி விண்வெளி குறித்த பல்வேறு ஆராய்சிகளை மேற்கொண்டனர். மூன்று முறை விஞ்ஞானிகள் குழு ஸ்கைலேப்-புக்கு அனுப்பப்பட்டது. ஸ்கைலேப் விண்வெளி நிலையத்துக்கு நான்காவது முறை விஞ்ஞானிகள் குழுவை அனுப்ப திட்டமிடப்பட்டது. ஆனால் அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டது. 1979 ஆம் ஆண்டு ஸ்கைலேப் பூமியில் விழும் என கணித்தது போலவே அது பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் போது அழிந்தது. (ஸ்கைலேப் விண்வெளி நிலையம் அழிந்தது)

இது தொடர்பான செய்திகள் :