1979 ஆம்ஆண்டுபிப்ரவரி 11 ஆம்நாள்

Home

shadow

 

ஈரானில் 15 ஆண்டு காலத்திற்குப் பிறகு பாரிசிலிருந்து நாடு திரும்பிய அயதுல்லா கோமேனியின் ஆதரவாளர்கள் டெஹ்ரான் நகரைக் கைப்பற்றினர். இதன்மூலம் 2500 ஆண்டுகளாக ஈரானில் நீடித்து வந்த பெர்ஷிய மன்னராட்சி முடிவுக்கு வந்தது. பஹ்லாவி வம்சத்தின் கடைசி மன்னரான மொஹமது ரேஸாஷாபஹ்லாவி அமெரிக்காவுடன் நெருக்கம் காட்டி வந்தார். ஈரான் நாட்டில் மேற்கத்திய கலாசாரம் பரவுவதாக மதவாதிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. இதையடுத்து உள்நாட்டில் தோன்றிய கடும் எதிர்ப்பின் காரணமாக மன்னர்ஷா, பொறுப்புகளை பிரதம அமைச்சர் ஷாப் போர் பக்தியாரிடம் ஒப்படைத்துவிட்டு ஈரானிலிருந்துவெளியேறினார். உள்நாட்டில் நிலவிவந்த எதிர்ப்பைச் சமாளிப்பதற்காக 15 ஆண்டுகளாக வெளிநாட்டில் வசித்து வந்த அயதுல்லாகோமேனியை மீண்டும் நாட்டிற்குத் திரும்ப அனுமதியளித்தார் பக்தியார். கோமேனி நாடு திரும்பியவுடன் ஈரானில் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. மன்னர் ஷாவின் ஆதரவாளர்களுக்கும் கோமேனியின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. அரசப்படையில் இருந்தவர்கள் புரட்சியாளர்களுடன் கைகோர்த்தனர். கலவரம் அதிகரிக்கவே, பிரதமர் பக்தியார் தலைமறைவானார். 1979 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் கோமேனி ஆதரவாளர்கள் டெஹ்ரான் நகரையும் அரசு வானொலி, தொலைக்காட்சி நிலையங்களையும் கைப்பற்றினர். இதன் தொடர்ச்சியாக கோமேனியின் கரங்களுக்கு ஆட்சி அதிகாரம் வந்து சேர்ந்தது.

 

இது தொடர்பான செய்திகள் :