1987 ஆம் ஆண்டு ஜனவரி  7ஆம் தேதி

Home

shadow

        1959 ஆம் ஆண்டு சண்டிகரில் பிறந்த கபில்தேவ் நிகாஞ்ச் சிறுவயது முதலே கிரிக்கெட்டைத் தனது உயிர்மூச்சாகக் கொண்டார். இந்திய அணி என்றாலே வெறும் சுழற்பந்து வீச்சு என்றிருந்த காலத்தில் நான் இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளன் என கர்வத்தோடு கூறிக் களத்தில் இறங்கிய கபில்தேவை கிரிக்கெட் உலகமே வியந்து நோக்கியது.

         1978 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கால்பதித்த கபில்தேவின்  பந்து வீச்சு எதிரணியினருக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தது. பந்துகளை ஏவுகணைகளாக்கி எதிராளிகளின் விக்கெட்டுகளைத் தகர்த்தெரிந்த கபில்தேவ் கிரிக்கெட் ரசிகர்களின் கனவு நாயகன் ஆனார். கபில்தேவின் அயராத முயற்சியும் தளராத நம்பிக்கையும் 1983 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு உலக கோப்பையைப் பெற்றுத் தந்தது. இந்தியாவில் இந்த நூற்றாண்டின் இணையற்ற கிரிக்கெட் வீரர் என பின்னாளில் விஸ்டன் விருது பெற்ற வரலாற்று நாயகன் கபில்தேவ், 1987 ஆம் ஆண்டு இதே நாளில், இலங்கைக்கு எதிராக கட்டாக்கில் நடைபெற்ற போட்டியில் தனது 300வது டெஸ்ட் விக்கெட்டை எடுத்து சாதனை படைத்தார்.

இது தொடர்பான செய்திகள் :