1987 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள்1987 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள்

Home

shadow


       உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான  ஆண்டி முர்ரே பிறந்தார். இவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த தொழில்முறை டென்னிஸ்வீரர் ஆவார். இவர் தற்போது உலக டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் நான்காவது இடத்திலும், தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் கூட்டமைப்பில் 2ஆவது இடத்திலும் உள்ளார். உலக டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் 2007ஆம் ஆண்டு முதன்முறையாக இடம் பிடித்தார். டென்னிசில் ஒரே ஆண்டில் நான்கு பெருவெற்றித் தொடர்களில் அரை இறுதி ஆட்டத்திற்கு முன்னேறிய ஏழாவது டென்னிஸ் வீரராக முர்ரே சாதனை படைத்து உள்ளார்.  2012 ஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரோஜர் பெடரரை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். அதே ஆண்டில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியிலும் பட்டம் வென்றார். 76 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டனைச் சேர்ந்தவர் வெல்லும் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பதக்கம் இதுவாகும். இதுவரை மூன்று கிராண்ட்ஸ்லாம் இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளார். அதேபோல், 2013ல் விம்பிள்டன் பதக்கத்தை வென்றார். 77 ஆண்டுகளுக்குப் பிறகு பிரித்தானியாவை சேர்ந்த ஆடவர் ஒருவர் வெல்லும் விம்பிள்டன் டென்னிஸ் பதக்கம் இதுவாகும். 

இது தொடர்பான செய்திகள் :