1989 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி

Home

shadow

           ஜப்பான் பேரரசர், ராஜ குடும்பத்தின் தலைவராகவும் ஜப்பான் நாட்டின் தலைவராகவும் கருதப்படுவார். ஜப்பான் அரசியல் அமைப்புச் சட்டப்படி இவருக்கு ஜப்பான் அரசாங்கத்தில் எந்த அதிகாரமும் இல்லை. ஜப்பான் ராஜ குடும்பம், உலகின் மிகப்பழமை வாய்ந்த ராஜ குடும்பமாக கருதப்படுகிறது. ஜப்பான் நாட்டை பேரரசர் ஜிம்மு கிமு 660 ஆம் ஆண்டு நிறுவினார்.

            இவர் சூர்ய பகவானின் நேரடி வாரிசாகக் கருதப்பட்டார். இவரின் வம்சாவளியைச் சேர்ந்த அகிஹிடோ 1933 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி பிறந்தார். பேரரசர் ஹிரோஹிடோவுக்கும் பேரரசி நகாகோவுக்கும் ஐந்தாவது குழந்தையாகப் பிறந்த அக்கிஹிட்டோ (Akihito), பேரரசர் ஹிரோஹிடோவின் மறைவுக்கு பின்னர் ஜப்பானின் 125 வது பேரரசராக பொறுப்பேற்றார். முதுமை காரணமாக தன்னுடைய அரச பதவியில் இருந்து விலக விரும்புவதாக அகிஹிடோ கடந்த 2016 ஆம் ஆண்டு அறிவித்தார். இவரது விருப்பப்படி, வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி பதவியில் இருந்து விலகுவார் என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. அகிஹிடோவின் மகன் நாருஹிடோ அடுத்த மன்னராகப் பொறுப்பேற்கவுள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :