1989 ஆம் ஆண்டு ஜனவரி  12  ஆம் தேதி

Home

shadow

          உகாண்டாவின் சர்வாதிகாரியாக இருந்த இடிஅமீன் காங்கோ நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். 1920-களில் பிறந்த இடியமின் சமையல் நிபுணராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அதன்பின் உகாண்டா ராணுவத்தில் ராணுவ வீரகளுக்கு உணவு சமைக்கும் பணியில் ஈடுபட்டார். ராணுவத்தில் சிப்பாய் ஆனார்.  ராணுவ வீரர், சார்ஜன்ட், தலைமை படை  அதிகாரி,  படைத்தளபதி, (Field Marshal) பீல்ட் மார்ஷல்  என படிப்படியாக பதவி  உயர்வு  பெற்றார்.  ராணுவ நிதியைத் தவறாகக் கையாண்டதாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அவரை கைது செய்யா உகாண்டா அரசு முடிவு செய்தது.  இந்நிலையில், 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற ராணுவப்புரட்சி மூலம் ஆட்சியைக் கவிழ்த்து உகாண்டாவின் அதிபராக பதவியேற்றார் இடிஅமீன்.

          ஆறுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்த இடியமினுக்கு நாற்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்தன. இனப்படுகொலை, அரசியல் அராஜகம், மனித உரிமை மீறல்கள், பாலியல் வன்முறைகள் என இடிஅமீன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. லட்சக்கணக்கான மக்களை கொன்றுள்ள இடியமின் மனித ரத்தம் குடிப்பார் எனவும், மனித மாமிசம் சாப்பிடுவார் எனவும் கூறப்பட்டது. உகண்டாவின் சர்வாதிகாரியாக இருந்த இடிஅமீனின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு 1979  ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். 1989 ஆம் ஆண்டு , (Zaire) சையர் என்று அழைக்கப்பட்ட காங்கோ நாட்டின் வழியே உகாண்டாவுக்குள் நுழைய இடிஅமீன் திட்டமிட்டார் . அதற்காக ஜனவரி 12 தேதி வேறு பெயரில் காங்கோ நாட்டுக்குள் நுழைய முயற்சித்த இடிஅமீன் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் சவுதி அரேபியாவில் தஞ்சம் புகுந்த இடிஅமீன்  2003 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இது தொடர்பான செய்திகள் :