1990 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி

Home

shadow

ஒன்றுபட்ட ஜெர்மன் நாடு உருவாக அமெரிக்கா, பிரிட்டின் மற்றும் பிரான்ஸ் நாடுகள் ஒப்புதல் வழங்கின. 1945ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரில் தோற்ற ஜெர்மனி நாடு இரண்டாக பிரிக்கப்பட்டது.அதன் கிழக்கு பகுதி சோவியத் கட்டுப்பாட்டிலும், மேற்கு பகுதி ஐரோப்பிய நாடுகளின் கட்டுப்பாட்டிலும் சென்றன. ஜெர்மன் தலைநகரான பெர்லினும் பிரிக்கப்பட்டது. 1980களில் சோவியத் யூனியனில் பொருளாதார அரசியல் பின்னடைவுகள் காரணமாக, ஜெர்மன் மீதான ஆதிக்கத்தை அவர்கள் சிறிது சிறிதாக விலக்கத்தொடங்கினர்.1989ஆம் ஆண்டு ஹங்கேரி நாடு எல்லை வேலியை எடுத்தது முதல் கிழக்கு ஜெர்மனியில் இருந்து ஆஸ்திரியாவுக்கு தப்பிச் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்தது.இதனைத் தொடர்ந்து கிழக்கு ஜெர்மனியில் போராட்டங்கள் நடைபெற்றன. பலர் மேற்கு ஜெர்மனிக்கு செல்ல விருப்பப்பட்டனர். கிழக்கில் இருந்து மேற்கு ஜெர்மனிக்கு மக்கள் படை எடுத்தனர். இதற்கு அவர்கள் பல்வேறு நாடுகளை கடக்க வேண்டி இருந்தது. பெர்லின் சுவரில் ஏறியும் பலர் மேற்கு ஜெர்மனிக்கு சென்றனர். 1989 ஆம் ஆண்டு November மாதம் மக்கள் பெர்லின் சுவரை இடிக்க ஆரம்பித்தனர். (German Democratic Republic) ஜெர்மன் ஜனநாயகக் கட்சி என்றழைக்கப்பட்ட கிழக்கு ஜெர்மனியும் (Federal Republic of Germany) ஜேர்மன் கூட்டாட்சி குடியரசு  என்றழைக்கப்பட்ட மேற்கு ஜெர்மனியும் இணைந்து ஒன்றுபட்ட ஜெர்மன் நாடு உருவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஒன்றுபட்ட ஜெர்மனியால் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு இருக்கும் என பிரிட்டன் கவலை தெரிவித்தது. ஆனால் பல்வேறு கட்ட முயற்சிக்கு பின் ஒன்றுபட்ட ஜெர்மன் நாடு உருவாக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் ஒப்புதல் வழங்கின.

இது தொடர்பான செய்திகள் :