1991 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி

Home

shadow

          ஆபரேஷன் பாலைவன புயல் (Operation Desert Storm) என்று அழைக்கப்பட்ட வளைகுடா போர் தொடங்கியது. ஈராக் அதிபர் சதாம் ஹுசைன்எண்ணெய் ஒப்பந்த விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக குவைத் நாட்டை ஆக்கிரமித்தார். அடுத்து அவர் பார்வை சவுதி அரேபியா மீது திரும்பியது. குவைத் மற்றும் சவுதி அரேபியாவின் எண்ணெய் வளங்கள் காட்டுப்பாடு ஈராக் கையில் விழுந்தால் அது உலகுக்கு பேராபத்தாக முடியும் என அமெரிக்கா கருதியது. ஈரான்-ஈராக் போரின் போது, அமெரிக்கா ஈராக் நாட்டுக்கு பெருமளவில் ஆயுதங்கள் விநியோகம் செய்தததால். ஈராக் படை உலகின் நான்காவது பெரிய படையாக இருந்தது. இதுவும் அமெரிக்காவின் அச்சத்துக்கு காரணமாக இருந்தது. அதனால் 1990ஆம் ஆண்டுசவுதி அரேபியாவில் அமெரிக்கா தன் படைகளை குவிக்க ஆரம்பித்தது. இதற்கு ஆபரேஷன் (DESERT SHIELD) பாலைவன கேடயம் என பெயரிடப்பட்டது. 1991ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதிக்குள் குவைத்தை விட்டு ஈராக் படைகள் வெளியேறவேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.இதனை ஈராக் ஏற்கவில்லை. இதையடுத்துஆபரேஷன் DESERT SHIELD, ஆபரேஷன் (Desert Storm) பாலைவன புயல் ஆக மாறியது. அமெரிக்க கூட்டுப்படைகள் ஈராக் படைகளை தாக்கத் தொடங்கின. வளைகுடா போர் தொடங்கியது.991 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி

இது தொடர்பான செய்திகள் :