1992 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் நாள் - வித்யாசாகர் சேது திறக்கப்பட்டது

Home

shadow


 

வித்யாசாகர் சேது என்று அழைக்கப்பட்ட இரண்டாம் ஹூக்லி பாலம் திறக்கப்பட்டது. 

கொல்கத்தா நகரத்தையும் ஹௌராவையும் இணைக்கும் விதமாக ஹூக்லி  நதியின் மேல் நான்கு பாலங்கள் உள்ளன. அவற்றில். முதல் பாலனமாது ஹௌரா பாலம் என அழைக்கப்படுகிறது. ஆங்கிலேயர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த பாலம் 1943ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. கி.பி.19 ஆம் நூற்றாண்டளவில், ஹூக்ளி நதியின் எதிரெதிர் கரைகளிலிருந்த கல்கத்தா மற்றும் ஹௌரா நகரங்கள்பிரிட்டிஷ் இந்தியாவின் முக்கியமான வர்த்தக மற்றும் கலாச்சார நிலையங்களாக இருந்தன . இரு நகரங்களுக்கும் இடையே நீர் வழி போக்குவரத்து மட்டுமே  இருந்தது. அதனால் ஹூக்ளி நதியில் ஆங்கிலேயர்கள் பாலம் கட்ட முடிவு செய்தனர். அதன்படி 1874 ல் மிதக்கும் பாண்டூன் பாலம் கட்டப்பட்டது. போக்குவரத்து நெரிசல் உட்பட பல்வேறு காரணங்களால் பெங்கால் அரசு 1933 ல் மிதவை பாண்டூன் பாலத்தை மாற்ற முடிவு செய்தது. அதன்படி 1943 ஆம் ஆண்டு புதிய ஹௌரா பாலம் கட்டப்பட்டது.  ஆனால் இந்தப் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படவே இரண்டாவது பாலம் கட்டும் பணி 1979ஆம் ஆண்டு தொடங்கி 1992 ஆம் ஆண்டு முடிவடைந்து பாலம் திறக்கப்பட்டது. பெங்கால் கல்வியாளர் பண்டிட் ஐஷ்வர் சந்திர வித்யாசாகரின் நினைவாக இதற்கு வித்யாசாகர் சேது என பெயர் சூட்டப்பட்டது. இந்தியாவில்  இரும்புக்கம்பிகளால் இழுத்து நிறுத்தப்பட்ட மிக நீளமான பாலமாக வித்யாசாகர் சேது கருதப்படுகிறது. 

இது தொடர்பான செய்திகள் :