1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் தேதி - பாபர் மசூதி இடிப்பு

Home

shadow


அயோத்தியாவில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்தியாவின் உத்திரப் பிரதேசத்திலுள்ளஅயோத்தியாவில் இந்து கடவுள் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் பாபர் மசூதி உள்ளது. 1528ஆம் ஆண்டு முகலாயர் படையெடுப்பிற்குப் பின் முகலாய படைத்தலைவர் மிர் பாங்கியினால் முகலாயப் பேரரசர் பாபரின் பெயரால் பாபர் மசூதி கட்டப்பட்டது. இந்த இடம் பல ஆண்டுகளாக இந்துக்களாலும் இஸ்லாமியர்களாலும் மத வழிபாடுகளுக்கான இடமாக பயன்படுத்தப்பட்டது. இந்தநிலையில் பல இயக்கங்கள் அவ்விடத்தைச் சொந்தம் கொண்டாடி நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்தன. இந்நிலையில் ராமர் பிறந்த இடத்தைக் கைப்பற்றுவோம் எனக்கூறி பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தோர் அயோத்தியில் கூடினர். அப்போது கட்டுப்பாடோ ஒருமித்த தலைமையோ இல்லாத அக்கும்பல் அங்கிருந்த மசூதியை இடித்தது. இதனைத் தொடர்ந்து நாடெங்கிலும் ஏற்பட்ட மதக் கலவரத்தால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஒரு பெரும் மதக்கலவரத்துக்கு மூலகாரணமான நிகழ்வாக இது வரலாற்றில் பதிவானது.


இது தொடர்பான செய்திகள் :