2002ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி - ஈராக் நாட்டுக்கு ஐ.நா-வின் எச்சரிக்கை

Home

shadow


ஈராக் ஆயுதங்கள் தயாரிப்பை கைவிட வேண்டும் என ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியது. 1990ஆம் ஆண்டு சதாம் உசேன் தலைமையிலான ஈராக் அரசு குவைத் நாடின் மீது போர் தொடுத்தது. இதனை அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடுமையாக எதிர்த்தன. இதனை தொடர்ந்து 1991ஆம் ஆண்டு குவைத் நாட்டில் இருந்து ஈராக் படைகளை வெளியேற்ற அமெரிக்கா வளைகுடா போரை தொடுத்தது.  வளைகுடா போருக்கு பின், ஈராக் நாட்டை கட்டுக்குள் வைக்க அதன் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா. ஐநா பாதுகாப்பு கவுன்சிலும் அமெரிக்காவுக்கு சாதகமாக பொருளாதார தடைகளை விதித்தது. பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களை ஈராக் தயாரிக்க கூடாது என தடை விதித்து, ஐநா பாதுகாப்பு கவுன்சில் 16 க்கும் மேற்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றியது. ஆனால் அமெரிக்காவோ சதாம் தலைமையிலான ஈராக் அரசை கவிழ்பதிலேயே குறியாக இருந்தது. அமெரிக்க அதிபராக  George W. Bush பதவியேற்ற பின், ஈராக் மீது போர் தொடுப்பது என முடிவெடுத்தது அமெரிக்கா. அதற்கு உலக நாடுகளின் ஆதரவைப் பெற  2002 ஆண்டு செப்டெம்பர் மாதம் ஐநா பாதுக்காப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய ஜார்ஜ் புஷ் ஈராக் மீது போர் தொடுபதற்கான தேவையை விளக்கினார். இங்கிலாந்து அதை ஆதரித்தாலும், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி சாமாதானத்தையே வலியுறுத்தின. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற விவாதத்துக்கு பின் நவம்பர் மாதம் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதில், ஈராக் பேரழிவு ஆயுதங்களை பதுக்கி வைத்திருக்கிறதா என சோதனை மேற்கொள்ளப்படும் எனவும், ஆயுதங்கள் இருந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அந்த தீர்மானத்தில் ஈராக் நாட்டுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


இது தொடர்பான செய்திகள் :