2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்

Home

shadow

சீன அதிபர் ஜி ஜின்பிங் வாழ்நாள் முழுவதும் சீன அதிபராக நீடிக்கும் வகையில் சீன நாடுளுமன்றத்தில் சட்டதிருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. ஒரு கட்சி ஆட்சியைக் கொண்டிருக்கும் நாடு சீனா. சீனாவில் அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளை வகிக்கும் ஒருவர் இருமுறை மட்டுமே பதவியில் இருக்க முடியும். இரண்டு முறைக்கு மேல் அவர்கள் அதிபராகும் வாய்ப்புகள் கிடையாது. இந்த கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் தெளிவான வரையறை மற்றும் திருத்தம் 2018ஆம் ஆண்டு செய்யப்பட்டது. அதற்கு ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவும் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து சீன நாடாளுமன்றத்தில், மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 2,958 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் பதிவாகின.

இதையடுத்து ஜி ஜின்பிங் தனது இரண்டாவது பதிவிக்காலமான 2023ஆம் ஆண்டுக்குப் பிறகும் தனது வாழ்நாள் வரைக்கும் அதிபராக தொடர்வதற்கான மசோதா நிறைவேறியது. 

இது தொடர்பான செய்திகள் :