Central Intelligence Agencyமத்திய புலனாய்வு முகமை நிறுவப்பட்டது

Home

shadow

                                   1946ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான (Central Intelligence Group) மத்திய புலனாய்வு குழு   உருவாக்கப்பட்டது.  FBI என்று அழைக்கப்பட்ட (Federal Bureau of Investigation) பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் அமெரிக்காவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புலனாய்வு தகவல்களை சேகரித்து வந்தது.ஆனால் போர் காலங்களில் அமெரிக்காவுக்கு தேவையான புலனாய்வு தகவல்களை சேகரித்து தருவதற்காக தனி அமைப்பு தேவை என அதிபர் (Franklin D. Roosevelt) ஃப்ராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் கருதினார். அதனைத் தொடர்ந்து (Office of Strategic Services) வியூக சேவைகள் அலுவலகம் 1942 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.அமெரிக்க நாட்டுக்கு வெளியில் இருந்து புலனாய்வுத் தகவல்களை சேகரித்து தரும் அமைப்பாக இது செயல்பட்டது. இதன் அதிகாரிகளுக்கு பிரிட்டிஷ் புலனாய்வுத் துறை பயிற்சி அளித்தது. இரண்டாம் உலகப்போர் முடிந்த பின், அதிபர் (Harry Truman) ஹாரி ட்ரூமன் 1945 ஆம் ஆண்டு OSS அமைப்பை கலைத்து உத்தரவிட்டார். இரண்டாம் உலகப் போருக்கு பின் புதிய புலனாய்வு அமைப்பின் தேவையை கருதி அதிபர் ட்ரூமன் மத்திய புலனாய்வு குழு (Truman Central Intelligence Group) என்ற புலனாய்வு அமைப்பை நிறுவ ஒப்புதல் வழங்கினார்.1946ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி உருவாக்கப்பட்ட (Central Intelligence Group) மத்திய புலனாய்வு குழு 17 மாதங்கள் செயல்பாட்டில் இருந்தது.அமெரிக்க காங்கிரஸ் 1947 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது. அதன்படி (Central Intelligence Group) மத்திய புலனாய்வு குழு கலைக்கப்பட்டு அதன் இடத்தில் தற்போது செயலபாட்டில் உள்ள (Central IntelligenceAgency) மத்திய புலனாய்வு முகமை நிறுவப்பட்டது.

இது தொடர்பான செய்திகள் :