Delta Sigma Theta அமைப்பு தொடங்கப்பட்டது

Home

shadow

           1913 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி ஆப்பிரிக்க அமெரிக்க கருப்பின பெண்களை உறுப்பினர்களாகக் கொண்ட Delta Sigma Theta அமைப்பு தொடங்கப்பட்டது. அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டிசி-யில் உள்ள ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் இது ஆரம்பிக்கப்பட்டது. 1913 ஆம் ஆண்டு ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த 22 பெண்கள் இணைந்து சேவை மனப்பான்மையுடன் Delta Sigma Theta அமைப்பை உருவாக்கினர். மாணவிகளின் கூட்டு முயற்சியில் கல்வியின் சிறப்பை மேம்படுத்தவும் தேவையானவர்களுக்கு உதவுவதை நோக்கமாகவும் கொண்டு இது ஆரம்பிக்கப்பட்டது. ஜாதி, மத, இன பாகுபாடு இல்லாமல் படித்த பெண்கள் மட்டுமே இதில் உறுபினர்களாக சேர முடியும். ஆப்ரிக்கா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த கருப்பினத்தவர்கள் அரசியல், கல்வி, சமூக, பொருளாதார நிலைகளில் மேம்பட இவர்கள் நடவடிக்கை எடுத்தனர். மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதில் உறுபினர்களாக உள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி, பெர்முடாஸ், பஹாமாஸ், தென் கொரியா ஆகிய நாடுகளில் டெல்டா சிக்மா தீட்டாவின் கிளைகள் இயங்குகின்றன.


இது தொடர்பான செய்திகள் :