இந்தியா ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று தொடங்குகிறது

Home

shadow

            இந்தியா  ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று தொடங்குகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையே நடந்த 20 ஓவர் போட்டித் தொடர் 1 க்கு 1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அதைத் தொடர்ந்து நடந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் சொந்தமாக்கி புதிய வரலாறு படைத்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது. மே மாதம் தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்னோட்டமாக இந்த ஒரு நாள் தொடர் கருதப்படுவதால் இரு அணி வீரர்களும் முழு திறமையை வெளிப்படுத்துவதில் தீவிரம் காட்டுவார்கள். உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடத்தை தக்க வைக்கும் முனைப்புடன் ஒவ்வொரு வீரர்களின் செயல்பாடு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இது தொடர்பான செய்திகள் :