இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

Home

shadow

விருதுநகரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டிகள் கடந்த 3 நாட்களாக தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் 400க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். வயது அடிப்படையில் 4 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. நாக்அவுட் முறையில் நடத்தப்பட்ட இந்த போட்டியின் இறுதி ஆட்டங்கள் நேற்று மாலை நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சிவஞானம், கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

இது தொடர்பான செய்திகள் :